கயத்தாறு அருகே மொபட் விபத்தில் ரோட்டோர கடைக்காரர் பலி

கயத்தாறு அருகே மொபட் விபத்தில் ரோட்டோர கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-06-03 21:00 GMT

கயத்தாறு,

கயத்தாறு அருகே மொபட் விபத்தில் ரோட்டோர கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.

ரோட்டோர கடைக்காரர்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள இத்திகுளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து. அவருடைய மகன் சங்கையா பாண்டியன் (வயது 33). இவர் கயத்தாறு– கடம்பூர் ரோட்டில் இரவு நேர பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் இருந்து கடையை நோக்கி தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் மொபட் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறியுள்ளது.

இதில் மொபட்டுடன் ரோட்டில் விழுந்த சங்கையா பாண்டியன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சங்ககையா பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சப்–இன்ஸ்பெக்டர் முத்துமாரி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் விசாரணை நடத்தி வருகிறார். சங்கையா பாண்டியனுக்கு கவிதா என்ற மனைவியும், கலைச்செல்வி (4), அம்பிகா (2½), சந்தன பாண்டியன் (1¼) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்