போலீசார் போல நடித்து நூதன முறையில் பெண்ணிடம் நகை திருட்டு
திருத்தணியில் போலீசாரை போல் நடித்து பெண்ணிடம் இருந்து நூதன முறையில் 12 பவுன் நகை திருடப்பட்டது.
திருத்தணி,
திருத்தணி பழைய பஜார் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி சியாமளா (வயது 64). இவர்களுக்கு சாருமதி என்ற மகள் உள்ளார். புருஷோத்தமன் இறந்துவிட்டதால் சியாமளா திருத்தணியில் தனியாக வசித்து வருகிறார். அவரது மகள் சாருமதி சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சியாமளா நேற்று முன்தினம் திருத்தணியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரத்தை எடுத்து கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
திருத்தணி காந்திசிலை அருகே வரும்போது மர்ம நபர்கள் 3 பேர் அவரிடம் தங்களை போலீசார் என அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர் அவர்கள் சியாமளாவிடம் திருத்தணியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடக்கிறது.
ஆகவே நீங்கள் அணிந்துள்ள நகைகளை கழற்றி பையில் போட்டு எடுத்து செல்லுங்கள். அதற்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று தெரிவித்தனர். அவர்கள் பேச்சை நம்பிய சியாமளா, தான் அணிந்து இருந்த 12 பவுன் நகைகளை கழற்றி அவர்களிடம் கொடுத்தார்.
அதை வாங்கிய அந்த மர்மநபர்கள் நகைகளை ஒரு பையில் போடுவது போல் பாசாங்குகாட்டி நகைகளை திருடி கொண்டு வெறும் பையை சுற்றி அதை சியாமளாவிடம் கொடுத்துவிட்டு வேகமாக சென்றுவிட்டனர். வீட்டுக்கு சென்ற சியாமளா பையை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. போலீஸ் என்று கூறியவர்கள் திருடி சென்றது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திருத்தணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியாக காட்சிகளை வைத்து நூதன முறையில் நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.