மூலையாறு கிராமத்தில் பட்டா வழங்க கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டம்
பட்டா வழங்க கோரி மூலையாறு கிராம பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரும்பாறை,
கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு பேரூராட்சிக்குட்பட்டது மூலையாறு கிராமம். இங்கு 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டா வழங்க கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பல ஆண்டுகளாக கோரிக்கை மனு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் தங்கள் நிலத்திற்கு பட்டா வழங்க கோரி பொதுமக்கள் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பண்ணைக்காடு கிராம நிர்வாக அலுவலர் சேபாசெல்வராணி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.