தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம்
வெங்கல் அருகே இந்திரா நகர் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே உள்ள கொமக்கம்பேடு ஊராட்சியை சேர்ந்த இந்திரா நகர் பகுதியில் 4 தெருக்கள் உள்ளது. சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பாண்டேஸ்வரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள மின்வயர்கள் வலுவிழந்து மிகவும் தாழ்வாக செல்கிறது.
மின் கம்பங்களும் சிமெண்டு பூச்சு உதிர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. கடந்த மாதம் மின்வயரில் கைபட்டதால் மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாபமாக இறந்து போனார். இதனால் இந்த பகுதி மக்கள் மின்வயரால் பேராபத்து எப்போது ஏற்படுமோ? என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.