குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலைமறியல் 4 அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
வாணியக்குடியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது 4 அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டன.
குளச்சல்,
குளச்சல் அருகே உள்ள சைமன் காலனி ஊராட்சிக்கு உட்பட்ட வாணியக்குடி பகுதி மக்களுக்கு கடந்த 20 நாட்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்தநிலையில் குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து, வாணியக்குடி சந்திப்பில் நேற்று காலை அப்பகுதி மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏராளமான பெண்கள் காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். இதில் ஆண்களும், குழந்தைகளும் கலந்துகொண்டனர்.
மேலும், சைமன்காலனி முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் புஷ்பராஜ், காங்கிரஸ் மீனவரணி மாவட்ட தலைவர் ஜோசப் மணி மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 4 அரசு பஸ்கள் மற்றும் வாகனங்களையும் அவர்கள் சிறைபிடித்தனர். மேலும், தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்தபிறகுதான் மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என்று அவர்கள் கூறினர். அப்போது, அந்த பகுதியில் மழை பெய்தது. ஆனால், அவர்கள் மழையில் நனைந்தபடி போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் லூக்காஸ், கருங்கல் சப்–இன்ஸ்பெக்டர் ஸ்ரீஹரிகுமாரன், குளச்சல் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் விஷ்ணு, கதிரவன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சைமன்காலனி ஊராட்சி அலுவலக ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.