வாடகைத் தாய் பெற்றெடுத்த இரட்டையர்கள்
வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்று, மகிழ்ச்சியாக அவைகளை வளர்க்கும் தம்பதிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
வி.எஸ்.அனில்குமார்- ரத்னம்மா தம்பதிகளும் அதில் ஒன்று. அவர்களது வீட்டில் சுக்ருதி என்ற ஆண் குழந்தையும், பிரக்ருதி என்ற பெண் குழந்தையும் தவழ்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறது. இவை இரட்டைக்குழந்தைகள்.
அனில்குமார்- ரத்னம்மா தம்பதிகளுக்கு திருமணமாகி 31 வருடங்கள் ஆகியிருக்கின்றன. அவர்கள் நீண்ட கால காத் திருப்பிற்கு பிறகு கடந்த ஆண்டு ஜூலை 19-ந்தேதி வாடகைத்தாயால் பெற்றோராகியிருக்கிறார்கள். அனில்குமார், கேரளாவை சேர்ந்த பிரபல சிந்தனையாளர் எம்.என்.விஜயனின் மகன். கண்ணூர் பல்கலைக்கழக பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். ரத்னம்மா, கல்லூரி ஒன்றில் மலையாள ஆசிரியையாக பணியாற்றியவர்.
இரட்டையர்களின் சுபாவத்திலும், செயல்பாட்டிலும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆண் குழந்தை சீக்கிரமாக தூங்கி, அதிகாலையிலே விழிக்கும் சுபாவம் கொண்டதாக இருக்கிறது. பெண் குழந்தையோ நன்றாக வெயில் அடித்த பின்பே விழிக்கிறது. இரண்டு குழந்தைகளும் தோற்றத்திலும் ஒரே மாதிரி இல்லை. முதல் நாள் குழந்தையை கையில் வாங்கும்போதும், பின்பு குழந்தைகளை பராமரிக்கும்போதும் ரத்னம்மா தடுமாறத்தான் செய்திருக்கிறார்.
“முதல் நாள் குழந்தையை தூக்கவே பயந்தேன். பால் ஊற்றும்போது சங்கை எப்படி பிடிப்பது என்று தெரியாமல் தடுமாறினேன். பின்பு உறவினர்கள் வந்து அதை எல்லாம் எனக்கு சொல்லித்தந்தார்கள். குழந்தைகள் பிறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே சென்னை சென்று பிள்ளைகளுக்கு உத்தேச அளவில் உடைகளும், அவைகளுக்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கிவந்தேன். நகம் வெட்டியும் வாங்கினேன். ஆனால் குழந்தைகளின் பிஞ்சு நகத்தை வெட்டும் அளவுக்கு எனக்கு தைரியம் வரவில்லை. உறவுப் பெண்தான் நகம் வெட்ட சொல்லிக்கொடுத்தாள். இப்போது குழந்தைகளுக்கு நகம் வெட்டுவது, குளிப்பாட்டுவது போன்ற எல்லா வேலைகளையும் நானே செய்துவிடுகிறேன்.
குழந்தைகளை மிக பாதுகாப்பாக வளர்க்கிறேன். ஜலதோஷம் ஏதாவது வந்துவிடக்கூடாது என்பதற்காக, வெளியே கொண்டு செல்வதில்லை. நான் மாதவிலக்கு நிரந்தரமாக நின்றுபோகும் மனோபாஸ் காலகட்டத்தை அடைந்துவிட்டதால் உடல் உஷ்ணம் மிக அதிகமானது. பேனை எவ்வளவு வேகமாக வைத்தாலும் உஷ்ணம் குறையவில்லை. அதனால் ஏ.சி. வாங்கிவிட்டோம். ஆனால் இந்த குழந்தைகள் வந்த பின்பு எனக்கு உடல் உஷ்ண பிரச்சினையே இல்லை. என் உடல் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. இப்போது குழந்தைகளின் நெஞ்சில் காற்றுபட்டு அவை களுக்கு தொந்தரவு எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, வீட்டில் பேன் ஓடவிடுவதில்லை. எனக்கு பயணம் செய்ய ரொம்ப பிடிக்கும். ஆனாலும் குழந்தைகளின் உடலுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, இப்போது வெளியூர் எங்கும் செல்வதில்லை. கல்லூரி பணியில் இருந்து ஓய்வு பெற்றபோது பிரிவுஉபசாரவிழா நடத்தினார்கள். அதில் மட்டும் தலையை காட்டிவிட்டு வந்தேன்..” என்கிறார், ரத்னம்மா.
அனில்குமாரும்- ரத்னம்மாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இருவருக்கும் குழந்தைகள் மீது அதிக பாசம். உறவினர்களின் குழந்தைகளிடம் அளவற்ற பாசம் காட்டினார்கள். ரத்னம்மா கல்லூரியில் இருந்து எப்போது வீடு திரும்புவார் என்று அக்கம்பக்கத்து வீட்டு குழந்தைகள் எதிர்பார்த்து காத் திருப்பார்கள். அவர் வந்ததும் அத்தனை குழந்தைகளும் அவர் வீட்டில் குழுமிவிடுவார்கள். எல்லா குழந்தைகளுக்கும் உணவூட்டி மகிழ்வார் ரத்னம்மா. குழந்தையில்லாத ஏக்கம் இந்த தம்பதியை ரொம்பவே வாட்டியிருக்கிறது.
“திருமணமான ஒரு வருடத்திலே நான் கர்ப்பிணியானேன். ஆனால் கருகலைந்துவிட்டது. கேரளாவில் உள்ள பிரபலமான டாக்டர் ஒருவர் ‘டி அன்டு சி’ செய்தார். அப்போது என்னிடம், அடுத்த மூன்று மாதத்திற்குள் மீண்டும் கர்ப்பிணியாகிவிடக் கூடாது என்ற தகவலை டாக்டர் சொல்லவில்லை. அந்த காலத்தில் இதை பற்றி எல்லாம் கேட்க தயங்கும் நிலைதான் இருந்து கொண்டிருந்தது. அதை தொடர்ந்து நான் மீண்டும் கர்ப்பமாக, அது கருக்குழாயிலே தங்கிவிட்டது. அது ஆபத்து என்பதால் அந்த கருக்குழாயை நீக்கும் நிலை ஏற்பட்டது. இன்னொரு கருக்குழாய் மூலம் தாய்மையடைய 50 சதவீத வாய்ப்பு இருப்பதாக சொன்னார்கள்.
நாங்கள் குழந்தைக்காக செய்யாத மருத்துவம் இல்லை. மேற்கொள்ளாத பத்தியம் இல்லை. ஒரு டாக்டர் சொன்னபடி தினமும் அரை கிலோ சிறிய வெங்காயமும், இரண்டு கட்டு கீரையும், மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டேன். இரண்டு வருடம் அப்படி சாப்பிட்டேன். தினமும் காலையில் எழுந்து வெங்காயத்தை உரிப்பதே ஒரு பெரிய வேலையாக இருந்தது. இன்னொரு டாக்டர் தினமும் இரவில் குறிப்பிட்ட பச்சிலையை அரைத்து வயிற்றை சுற்றி பூசிக்கொண்டு தூங்கச்சொன்னார். பாட்டில் பாட்டிலாக மருந்தும் குடித்து பார்த்தேன் எந்த பலனும் ஏற்படவில்லை.
எல்லா பரிசோதனைகளையும் பெண்களின் உடலில்தான் நடத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் வெறுத்துபோய் எல்லா சிகிச்சைகளையும் நிறுத்திவிட்டு, எனக்கு பிடித்தமாதிரி வாழத் தொடங்கினேன். புத்தகம் வாசித்தல், எழுதுதல் என்று வாழ்க்கையை திசை திருப்பினேன். ஆனாலும் வீட்டிற்கு வந்ததும் குழந்தையில்லாத ஏக்கம் தலைதூக்கத்தொடங்கிவிடும்.
நாங்கள் இருவரும் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், குடும்ப டாக்டர் எங்களை அழைத்தார். அவர் சோதனைக்குழாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு எங்களிடம் அறிவுறுத்தினார். நாங்கள் ஏற்கனவே எனது சினை முட்டையையும், கணவரது உயிரணுவையும் எடுத்து பாதுகாத்தோம். அதை பயன்படுத்தி அந்த சிகிச்சையை தொடங்கிவிடலாம் என்று முடிவு செய்தபோது, எனது கருப்பையில் கட்டிகள் இருப்பதை கண்டறிந்தார்கள். அதனால் அந்த வாய்ப்பும் இல்லாமல்போனது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே தீர்வு என்ற நிலை உருவானது.
அதன் பிறகுதான் நாங்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தோம். மும்பையை சேர்ந்த ஷமா என்ற பெண் வாடகைத்தாயாக சம்மதித்தார். அவர் 26 வயதுகொண்ட சுறுசுறுப்பான பெண். அவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. எனது சினை முட்டையையும், கணவரது உயிரணுவையும் பயன்படுத்தி, முறையான சிகிச்சையால் அந்த பெண் கர்ப்பிணியானதும் நாங்கள் ஒவ்வொரு மாதமும் அவரை சந்திக்கசெல்வோம். அவ்வப்போது ஏதாவது பிரச்சினை எழுந்தபடிதான் இருந்தது. பால் தரவில்லை. பழம் தரவில்லை என புகார் செய்வார். நர்ஸ்களால் சமாதானம் செய்ய முடியாதபோது எங்களை அழைப்பார்கள். பின்பு நாங்களும், டாக்டர்களும் சென்று சமாதானம் செய்வோம். நாங்கள் அவரை பார்க்கப்போகும் போதெல்லாம் அவர் கேட்கும் பொருட்களை எல்லாம் வாங்கிக்கொடுப்போம். அவரது கணவரும், குழந்தைகளும் அருகில் இல்லாததால் மிக கோபமாக நடந்து கொண்டார். சிசேரியன் மூலம் பிரசவம் நடந்தபோது அவரது கணவரையும் உடனிருக்கும்படி செய்திருந்தோம். குழந்தைகளுக்கு சில நாட்கள் அவர் பால்புகட்டவேண்டும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அந்த தாய்க்கு பால் சுரக்கவில்லை. இப்போதும் ஷமா எப்போதாவது பேசுவார்..” என்று நெகிழ்கிறார், ரத்னம்மா.
சிசேரியனுக்காக ஷமாவை ஆபரேஷன் தியேட்டருக்குள் கொண்டு சென்றபோது ‘திருமணமானதும் தான் கர்ப்பிணியாகி மகள் பிறந்திருந்தால், அவள் தற்போது ஷமா போன்றுதான் இருப்பாள். என் மகள் பிரசவ அறைக்குள் செல்வதை போன்றுதான் நான் உணர்ந்தேன்’ என்று ரத்னம்மா சொல்கிறார்.
இவர் வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்றிருப்பதை சமூகம் எப்படி எடுத்துக்கொள்கிறது?
“சிலர் என்னிடம், ‘இவைகள் ஒன்றும் உங்கள் குழந்தைகள் இல்லையே!’ என்று சொல்கிறார்கள். டீயை ஒரு பாத்திரத்தில் எடுத்து குடிக்கிறோம். அங்கு பாத்திரம் முக்கியம் அல்ல, டீதான் முக்கியம். சிலருக்கு பாத்திரத்தை பற்றிதான் பிரச்சினையே! குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் முன்பே நீங்கள் முதுமையடைந்துவிடுவீர்களே என்று சிலர் சொல்கிறார்கள். அந்த கவலை எனக்கு இல்லை. விதியை யாராலும் வெல்லமுடியாது” என்கிறார், ரத்னம்மா.
இந்த இரட்டைக் குழந்தைகளை வாடகைத்தாய் பிரசவித்ததும், தனது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரது மடியில் குழந்தைகளை ரத்னம்மா கிடத்தியிருக்கிறார். பின்பு குழந்தைகளை வாங்கிவிட்டு, தாயாரை கவனமாக வீட்டிற்கு அனுப்பிவைத்திருக்கிறார். அன்றே தாயார் மரணமடைந்திருக்கிறார். “பேரக்குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் வழங்கிவிட்டு பாட்டி விடைபெற்றுவிட்டார்” என்று நெகிழ்கிறார்கள்.