பறந்து வரும் ‘டீ’
டீ வியாபாரம் செய்து மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார், ரகுவீர் சிங் சவுத்ரி.
ரகுவீர் சிங் சவுத்ரி டீக்கடை நடத்துவதற்கு எந்தவிதமான முதலீடும் செய்யவில்லை. ஆன்லைன் மூலமே டீ விற்பனை செய்கிறார். ஜெய்ப்பூர் நகரில் வசிக்கும் இவர் அந்த பகுதியில் ஆர்டர் செய்த சில நிமிடங்களில் வீடு தேடி சூடான டீயை சப்ளை செய்துவிடுகிறார்.
ஆரம்பத்தில் ரகுவீர் சிங் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார். ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருளை சைக்கிள் மூலம் வீடு தேடி சென்று வினியோகிக்கும் பணியை செய்திருக்கிறார். சைக்கிள் சவாரியின்போது ஏற்படும் களைப்பை போக்க ஆங்காங்கே டீ அருந்தி ஆசுவாசப் படுத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். அப்போதுதான் தான் கொண்டு சேர்க்கும் பொருட்களை போலவே டீயையும் வீடு தேடி சென்று சப்ளை செய்யும் எண்ணம் உதயமாகி இருக்கிறது.
செல்போன் ஒன்றையே முதலீடாகக் கொண்டு, ஏற்கனவே செய்து வரும் ஆன்லைன் ஆர்டர் அனுபவத்தை பயன்படுத்தி களம் இறங்கி இருக்கிறார். 15 நிமிடங்களில் வீடு தேடி டீ கொண்டு வந்து தருகிறேன் என்று ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து அந்த பகுதியில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். இவருடைய முயற்சிக்கு வரவேற்பு கிடைக்கவே, நண்பர்களின் துணையுடன் வியாபாரத்தை விரிவுபடுத்தி விட்டார்.
பிரபலமான கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டீ கொடுத்து வரவேற்கும் வழக்கம் இருப்பதால் அந்த நிறுவனங்களில் மொத்தமாக ஆர்டர் வாங்கி டீ சப்ளை செய்து வருகிறார். தற்போது 4 இடங்களில் டீ சப்ளை செய்வதற்கான மையங்களை நிறுவி இருக்கிறார். தினமும் 500 முதல் 700 ஆர்டர்கள் கிடைக்கின்றன. வீடு தேடி டீ மற்றும் சிற்றுண்டி வகைகளை வழங்குவதற்காக சொந்தமாக 4 மோட்டார் சைக்கிள்களும் வாங்கி இருக்கிறார். ஆன்லைன் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது மாதம் 9 ஆயிரம் சம்பளம் வாங்கி இருக்கிறார். இன்று தொழில் முனைவோராக ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.