ரே ரோட்டில் தோல்பொருள் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

மும்பை ரே ரோடு பாரிஸ்டர் நாத் பாய் சாலையில் தோல்பொருட்கள் தயார் செய்யும் தொழிற்சாலை உள்ளது.

Update: 2018-06-03 00:07 GMT
மும்பை,

அதிகாலை 4.30 மணியளவில் இந்த தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தோல் பொருட்கள் என்பதால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 8 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்க போராடினார்கள்.

காலை 7.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் அந்த நிறுவனத்தில் இருந்த தோல் பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்