போலீஸ் அதிகாரியை தாக்கிய 2 பேருக்கு சிறை தண்டனை

போலீஸ் அதிகாரியை தாக்கிய 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.;

Update:2018-06-03 05:29 IST
மும்பை,

மும்பை ஆர்தர்ரோடு சிறையில் விசாரணை கைதிகளாக பர்வேஸ் கான்(வயது29), தபரேஷ் சையத்(24) ஆகிய 2 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனஞ்செய் மோரே தலைமையில் போலீசார் வேனில் ஏற்றி அழைத்துச்சென்றனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க அழைத்து வந்தபோது, பர்வேஸ் கான் தனது குடும்பத்தினரிடம் இருந்து மதிய உணவு பெற்றுக்கொள்ள உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனஞ்செய் மோரேவிடம் அனுமதி கேட்டார்.

இதற்கு அவர் அனுமதி மறுத்து உள்ளார். இதில், ஆத்திரமடைந்த கைதிகள் 2 பேரும் அவரை பிடித்து தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து நேற்று முன்தினம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

அப்போது, போலீஸ் அதிகாரியை தாக்கிய குற்றத்திற்காக பர்வேஸ்கானுக்கு ஓராண்டும், தபரேஷ் சையத்துக்கு 6 மாதங்களும் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பு கூறினார். 

மேலும் செய்திகள்