அம்பேத்கர் உருவப்படத்தை எரித்த 3 பேர் கைது
அம்பேத்கர் உருவப்படத்தை எரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
குடியாத்தம்,
கே.வி.குப்பத்தை அடுத்த பில்லாந்திப்பட்டு சோலையூர் பகுதியைச் சேர்ந்த சிலர் அம்பேத்கர் உருவப்படத்தை காலால் மிதித்து, தீவைத்து எரிப்பது போன்ற வீடியோ மற்றும் போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதனை பார்த்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைசெல்வன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பில்லாந்திப்பட்டு சோலையூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 22), சதீஷ்குமார் (23), அஜித்குமார் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போலீஸ் நிலைய வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர். அவர்களிடம் இந்தச் சம்பவம் தொடர்பாக பில்லாந்திப்பட்டு சோலையூர் பகுதியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.