தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 27-ந் தேதி கடைசிநாள்

வாணியம்பாடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 27-ந் தேதி கடைசிநாள் ஆகும்.

Update: 2018-06-02 22:54 GMT
வேலூர்,

வாணியம்பாடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்தாண்டிற்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இச்சேர்க்கையில் கலந்து கொள்ள www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது அருகே உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சான்றிதழ்களுடன் சென்று இலவசமாக விண்ணப்பிக்கலாம். 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.

இங்கு லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் மெக்கானிக், பேஷன் டிசைன் மற்றும் டெக்னாலஜி, கம்மியர் மோட்டார் சைக்கிள், கம்மியர் குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலையை கட்டுப்படுத்துதல், தோல்பொருள் உற்பத்தியாளர் ஆகிய பயிற்சிகள் கட்டணம் இன்றி அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க வருகிற 27-ந் தேதி கடைசி நாளாகும்.

இத்தகவலை வாணியம்பாடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்