அனுமதியின்றி இறால் பண்ணை அமைத்தால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
அனுமதியின்றி இறால் பண்ணை அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி இறால் பண்ணை அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டத்தின் கீழ் அனுமதி பெறாமல் யாரேனும் இறால் வளர்ப்பு உள்ளிட்ட கடல்வாழ் உயிரின வளர்ப்பினை பண்ணைகளில் மேற்கொண்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.
மேலும் பட்டா நிலம், வனத்துறை நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் பதிவுச்சான்று இன்றி இறால் பண்ணை அமைத்து வெளிநாட்டு இறால் வெனாமி, வரி இறால் வளர்த்து வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும்.
அதையும் மீறி வளர்ப்பவர்கள் மீது கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுச்சான்று புதுப்பிக்க வேண்டியவர்கள் உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும்.
மேலும் இறால் வளர்ப்பிற்கு நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது. மீறி நிலத்தடி நீரை இறால் வளர்ப்பிற்கு பயன்படுத்தினால் பதிவுச்சான்றிதழ் ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.