திருத்துறைப்பூண்டியில் அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரதம்

திருத்துறைப்பூண்டியில் அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-02 22:45 GMT
திருத்துறைப்பூண்டி,

7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி கிராமப்புற அஞ்சல்துறை ஊழியர்கள் 12-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சலக ஊழியர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்துக்கு கிளை செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

இதில் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் வேதரத்தினம், தி.மு.க. தலைமை பேச்சாளர் உதயகுமார், எல்.ஐ.சி. முகவர்கள் சங்க நிர்வாகி வேதையன், மாநில துணை பொது செயலாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசியக்குழு உறுப்பினர் வையாபுரி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். முடிவில் கிராமப்புற அஞ்சலக செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்