விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்த 2½ கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
மயிலாடுதுறையில், விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்த 2½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிட்டப்பா பாலம் அருகே நின்று கொண்டு இருந்த ஹாஜியார் நகரை சேர்ந்த காமராஜ் (வயது 45) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், 1½ கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.
இதேபோல் மயிலாடுதுறை ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒத்தசரகு பகுதியை சேர்ந்த கடல் ராஜா (40) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜாவும், 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார், இருவரிடம் இருந்த 2 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜ், கடல் ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.