குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
நெய்தலூரில் குடிநீர் வழங்கக்கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
நச்சலூர்,
தோகைமலை ஒன்றியம் நெய்தலூர் ஊராட்சி இந்திரா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அதன் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன்மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிக்க தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வரும் மக்கள் அருகே உள்ள ஊர்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். மேலும் இந்திராநகரில் உள்ள காவிரி கூட்டுக்குடிநீர் நீரேற்று நிலையத்திலுள்ள குழாயிலும் 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரனிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை நெய்தலூர்-சின்னப்பனையூர் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தோகைமலை ஒன்றிய முன்னாள் தலைவர் சந்திரசேகரன், முன்னாள் கவுன்சிலர் ஞானசேகரன், ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் நெய்தலூர்- சின்னப்பனையூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.