விமான நிலையத்தில் பயணி கடத்தி வந்த ரூ.2¼ லட்சம் தங்க சங்கிலி பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் பயணி கடத்தி வந்த ரூ.2¼ லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதில் சென்னையை சேர்ந்த அருண் என்பவருடைய உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் 75 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
தங்க சங்கிலி பறிமுதல்
இதையடுத்து தங்க சங்கிலியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.