“முன்னுதித்த நங்கையம்மன் கோவில் மேற்கூரையை சீரமைத்து கொடுப்பேன்” நடிகர் சுரேஷ்கோபி எம்.பி. தகவல்
சுசீந்திரம் “முன்னுதித்த நங்கையம்மன் கோவில் மேற்கூரையை சீரமைத்து கொடுப்பேன்” என்று நடிகர் சுரேஷ்கோபி எம்.பி. கூறினார்.;
சுசீந்திரம்,
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு நேற்று கேரள நடிகர் சுரேஷ் கோபி எம்.பி. வந்தார். அவர் கோவிலின் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து முன்னுதித்த நங்கையம்மன் கோவிலுக்கு சென்று முகப்பில் உள்ள கூரையை பார்வையிட்டார்.
அதன்பிறகு நடிகர் சுரேஷ்கோபி எம்.பி. நிருபர்களிடம் பேசும் போது கூறியதாவது:-
சீரமைத்து கொடுப்பேன்
கேரளாவில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கு பெறுவதற்காக, சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் வாகனம் கடந்த ஆண்டு திருவனந்தபுரத்துக்கு புறப்படும் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்தேன். அப்போது முன்னுதித்த நங்கையம்மன் கோவில் முகப்பில் உள்ள மேற்கூரை மோசமான நிலையில் இருந்ததை பார்த்தேன். எனவே வருகிற நவராத்திரி விழாவுக்குள் கோவில் மேற்கூரையை சீரமைத்து கொடுப்பேன். மேலும் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் நுழைவு வாயிலில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்து கொடுப்பேன். இவற்றை என் தொகுதி நிதி அல்லது சொந்த நிதியில் இருந்து செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சுசீந்திரம் வந்த நடிகர் சுரேஷ்கோபி எம்.பி.யை நகர பா.ஜனதாவினர் மற்றும் திருக்கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.