கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் கதிரவன் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2018-06-02 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 10-ந் தேதி 26-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடக்க விழா நடைபெறுகிறது. இதையொட்டி அரங்குகள் அமைக்கும் பணியை கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் கலெக்டர் கதிரவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

29 நாட்கள்

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 26-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வருகிற 10-ந் தேதி முதல் அடுத்த மாதம் 8-ந் தேதி வரை 29 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். இதில் 50 அரசு துறை அரங்குகள், 80 தனியார் அங்காடிகள் மற்றும் கலையரங்கம், மா கண்காட்சி அரங்கு, கேளிக்கை அரங்குகள், திண்பண்ட கடைகள், ஆவின் பாலகம், மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்பு பொருட்கள் விற்பனை அங்காடிகள் மற்றும் 36 துறைகளுடைய அரசு சாதனை விளக்க அரங்குகள், அமைக்கப்பட உள்ளது.

அத்துடன் பள்ளி மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள், உள்ளூர் கலைஞர்களின் இன்னிசை கச்சேரி, பட்டிமன்றங்கள், நாட்டிய நிகழ்ச்சி, மற்றும் விடுமுறை நாட்களில் இன்னிசை நிகழ்ச்்சிகள் நடைபெற உள்ளது. அனைத்து அரசு துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரங்குகளில் அரசின் சாதனைகள், துண்டு பிரசுரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்தும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில் சிறப்பாக அரங்குகள் அமைக்க வேண்டும்.

குடிநீர் வினியோகம்

நகராட்சி சார்பாக நாள்தோறும் தூய்மை பணிகள் மற்றும் குடிநீர் வினியோகம் பணிகளை செய்ய வேண்டும். மின்சாரத் துறை சார்பில் பாதுகாப்பான மின்வினியோக பணிகளை மேற்கொள்ள வேண்டும். காவல் துறை சார்பாக பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.ஏ.கேசவன், நகர் மன்ற முன்னாள் துணை தலைவர் வெங்கடாசலம், வட்டார வளர்்ச்சி அலுவலர்் பிரசன்னா, நகாராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில் தாமஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் குருராஜ், பாலாஜி, மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்