ராசிபுரம் அருகே மரத்தில் பஸ் மோதி விபத்து டிரைவர் உள்பட 19 பேர் காயம்
ராசிபுரம் அருகே மரத்தில் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.;
ராசிபுரம்,
ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோட்டுக்கு நேற்று மாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ் ராசிபுரம்-திருச்செங்கோடு சாலையில் குருசாமிபாளையம் அருகே உள்ள வண்டிப்பேட்டை என்ற இடத்தில் சென்றது.
அப்போது திடீரென்று ரோட்டின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் பஸ் மோதியது. இதில் பஸ்சின் டிரைவர் மற்றும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 18 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள்
புதுப்பட்டியை சேர்ந்த பஸ் டிரைவர் சதீஸ்குமார் (வயது 37), மோளப்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் (70), தம்மம்பட்டி கார்த்திகேயன் (28), செம்மாம்பட்டி காமராஜ் (37), வையப்பமலை லட்சுமி (50), குருசாமிபாளையம் ஆனந்தி (30), குட்டலாடம்பட்டி சத்யா (30), வெண்ணந்தூர் பார்வதி (60), செல்வி (45), எலச்சிபாளையம் பிரியா (27), ராசிபுரம் புஷ்பா (35), ராசிபுரம் ஜெயலட்சுமி (63),வையப்பமலை காமாட்சி (40) ஆகிய 13 பேரும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சைக்குப் பின் தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களைத் தவிர வையப்பமலையைச் சேர்ந்த காளியம்மாள் (48), பாப்பாத்தி (65), அல்லி (50), ராமாயி (50), ஜங்கமா (55), லட்சுமி (65) ஆகிய 6 பேரும் காயம் அடைந்தனர். இவர்கள் மல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு புதுச்சத்திரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.