வீட்டில் நிறுத்தி இருந்த கார், ஸ்கூட்டர் தீ வைத்து எரிப்பு போலீசார் விசாரணை
நாமக்கல்லில் வீட்டில் நிறுத்தி இருந்த கார் மற்றும் ஸ்கூட்டர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்,
நாமக்கல் இ.பி.காலனி ராம்நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் நைஜீரியா நாட்டில் வேலை பார்த்து வரு கிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 49). மகள் வனிதாவுடன் நாமக்கல்லில் வசித்து வருகிறார்.
இவர்கள் வீட்டின் போர்டிகோவில் கார் மற்றும் ஸ்கூட்டரை நிறுத்தி வைத்து இருப்பது வழக்கம். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவும் நிறுத்தி வைத்து விட்டு தூங்கிவிட்டனர்.
இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் காரின் டயர் வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது கார் தீப்பிடித்து கொண்டு இருந்தது.
உடனடியாக அவர் இது குறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் கார் மற்றும் ஸ்கூட்டர் முற்றிலும் தீயில் எரிந்து சேதம் ஆனது. இதேபோல் வீட்டின் முன்புற ஜன்னல், கதவு உள்ளிட்டவையும் இதில் சேதம் அடைந்தன.
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் பார்வையிட்டபோது, நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் மீது சந்தேகம் எழுந்து உள்ளது.
இருப்பினும் வீட்டில் நிறுத்தி இருந்த கார் மற்றும் ஸ்கூட்டருக்கு தீ வைக்க காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.