குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
திருத்தணி அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணி,
திருத்தணி அருகே உள்ள வேலஞ்சேரி காலனியில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டது.
இதனால் அவதிக்குள்ளான அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காததால் வெகுதூரம் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர்.
தங்கள் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று திருத்தணி-நாகலாபுரம் சாலையில் பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைப்பற்றி அறிந்த திருத்தணி தாசில்தார் நரசிம்மன், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமணன், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் அதிகாரிகள் அங்கு உடனே சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் குடிநீர் முறையாக வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.