துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த வாலிபருக்கு செயற்கை கால் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
“துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து கால் அகற்றப்பட்ட வாலிபருக்கு செயற்கை கால் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் காயம் அடைந்தவர்களை கடந்த 27-ந் தேதி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மரணமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியும், சிறு காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தியும் வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டு உள்ளார். அதன்படி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று (அதாவது நேற்று) ஆஸ்பத்திரியில் பார்வையிட்ட போது காயமடைந்தவர்கள் தங்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுவதாக தெரிவித்தார்கள். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு ஆணை பிறப்பித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்கள்.
உயர்நீதிமன்ற அறிவிப்பின்படி, 2 தடயவியல் நிபுணர்கள், ஜிப்மர் மருத்துவர் அடங்கிய மருத்துவ குழுவினர் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் முன்னிலையில் 7 பேரின் உடல்களை மறு உடற்கூராய்வு செய்துள்ளார்கள்.
இதில், செல்வசேகர் (வயது 42), சண்முகம் (38), கார்த்திக் (20) ஆகியோரின் உடல்கள் கடந்த 31-ந் தேதி அன்றும், காளியப்பன் (22) கந்தையா (58) ஆகியோரின் உடல்கள் 1-ந் தேதி அன்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று (அதாவது நேற்று) தமிழரசனின் உடல் அவரின் தாயார் ராமலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டு ரூ.20 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
உயிர் இழந்த காளியப்பனின் தாயார் மகேசுவரியிடமும் ரூ.20 லட்சத்துக்கான காசோலை வழங்கும்போது தன்னுடைய மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரின் மகள் அரசு வேலைக்கான வயது பூர்த்தி அடையும்போது தகுந்த அரசு வேலை வழங்க அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கிட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும், 6 பேரின் உடல்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் உடல்களும், நிவாரண நிதியும் வழங்கப்படும்.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 56 பேர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பழங்கள் வழங்கி ஆறுதல் கூறினேன். மேலும், போராட்டத்தின்போது காயமடைந்த அனைவருக்கும் தரமான சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டின் போது தன்னுடைய வலது காலை இழந்த பிரின்ஸ்டன் என்பவர் தனக்கு அரசு வேலை வேண்டும் என என்னிடம் கோரிக்கை வைத்தார். அதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அவருக்கு செயற்கை கால் பொருத்த சென்னைக்கு கொண்டு சென்று அரசின் நிதி உதவியோடு நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் பிரசாந்த், போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் லலிதா, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.