‘இன்போசிஸ்’ தலைவருடன் குமாரசாமி சந்திப்பு பெங்களூரு வளர்ச்சிக்கு ஆலோசனை கேட்டார்

‘இன்போசிஸ்‘ தலைவரை சந்தித்து பேசிய குமாரசாமி, பெங்களூரு வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டார்.

Update: 2018-06-02 00:29 GMT
பெங்களூரு,

மென்பொருள் உற்பத்தியில் உலக அளவில் மிக பிரபலமாக விளங்கும் ‘இன்போசிஸ்‘ நிறுவன தலைவர் நாராயணமூர்த்தியை பெங்களூரு ஜெயநகரில் உள்ள அவருடைய இல்லத்தில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது பெங்களூருவின் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் பெங்களூருவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், குப்பை கழிவுகளை சீரான முறையில் நிர்வகிப்பது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண தனது தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைக்க உள்ளதாகவும், அதுகுறித்து ஆலோசனை வழங்குமாறும் அவர் கேட்டார். இதை ஏற்றுக்கொண்ட நாராயணமூர்த்தி, தேவையான ஆலோசனை வழங்குவதாக கூறினார்.

அந்த நிபுணர் குழு 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடி ஆலோசனை நடத்தும் என்று குமாரசாமி கூறினார். நகர வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவதாக குமாரசாமியை நாராயணமூர்த்தி பாராட்டினார். நகரில் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தும்போது, நகரில் இயங்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளின் நம்பிக்கையை பெற முயற்சி செய்யுமாறு குமாரசாமிக்கு அவர் அறிவுரை வழங்கினார். 

மேலும் செய்திகள்