வருமான வரித்துறை அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
மும்பை வருமான வரித்துறை அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த ஆவணங்கள் எரிந்து நாசமாகின.
மும்பை,
மும்பை பல்லார்டு பியர் பகுதியில் சிந்தியா ஹவுஸ் என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வருமான வரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், நேற்று மாலை 4 மணியளவில் திடீரென அந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளி வந்தது. அடுத்த சில நொடிகளில் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். சிலர் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக மொட்டை மாடி நோக்கியும் ஓடினர்.
சிறிது நேரத்தில் தீ 3-வது மாடியில் இருந்த மற்ற அறைகளுக்கும் பரவியதுடன், 4-வது மாடியிலும் பற்றியது. இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 8 வாகனங்களில் விரைந்து வந்தனர்.
அவர்கள் வாகனத்தில் ஏறி நின்றபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினார்கள்.
இதற்கிடையே தப்பிக்கும் முயற்சியில் மொட்டை மாடிக்கு ஓடிச்சென்று மேலே சிக்கியிருந்த 5 பேரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வருமான வரித்துறை அலுவலக கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது மாடிகளில் இருந்த ஆவணங்கள், கணினிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டதாக கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.