32 கிலோ தங்க கட்டிகள் கடத்திய 3 பேர் கைது

மேற்கு வங்க மாநிலத்தில் 32 கிலோ தங்க கட்டிகள் கடத்திய மராட்டியத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2018-06-01 23:35 GMT
மும்பை,

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் மர்ம நபர்கள் சிலர் தங்கம் கடத்த இருப்பதாக வருவாய் துறை புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சேவோக் சாலையில் உள்ள சினிமா அரங்கம் அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில் அவர்கள் தங்களது உடைமைகளுக்குள் தலா ஒரு கிலோ கொண்ட 32 தங்க கட்டிகள் மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தங்க கட்டிகளை கைப்பற்றிய அதிகாரிகள் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 3 பேரும் மராட்டியத்தை சேர்ந்த அகோய் மகர், தானிஜி சாகேப் பாபர் மற்றும் பிரவின் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் சீனா நாட்டில் இருந்து சிக்கிம் மாநிலம் வழியாக இந்த தங்க கட்டிகளை கடத்தி வந்திருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்