கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள சாலையோரத்தில் கடை வைத்திருக்கும் பெண் வியாபாரியிடம், பெண் ஒருவர் கடந்த வாரம் ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்து பொருட்கள் வாங்கினார்.
சேலம்,
பின்னர் அந்த நோட்டு, கள்ளநோட்டு போல் இருந்ததால், அவருக்கு சந்தேகம் இருந்தது. மறுநாள் அந்த நோட்டு கலர் மாறி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அந்த பெண் மற்றும் வேறு ஒரு பெண்ணுடன் வந்து கள்ளநோட்டை கொடுத்து பொருட்களை வாங்கினார்.
இதையடுத்து அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த பெண் வியாபாரி பிடித்து, சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் வீராணத்தை சேர்ந்த வளர்மதி (வயது29), சங்கீதா (25) என்பதும், அவர்கள் புதிய ரூ.2 ஆயிரம், ரூ.500 ரூபாய் நோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டு பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் அந்த பெண்களுக்கு கள்ளநோட்டை கொடுத்தது வீராணத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிவண்ணன் (30) என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிவண்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு யார்? ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் அடித்து கொடுத்தார்கள் என்பது குறித்தும், இதில் யார் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.