அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.;

Update: 2018-06-01 23:00 GMT
தர்மபுரி

தர்மபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் இருக்கும் தொழிற் பிரிவுகளில் சேர்க்கை பெற இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். பெண்களுக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்பியாள் பிரிவிற்கும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கணினி ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதவியாளர், கட்டிட பட வரைவாளர், மின்பணியாளர், வெல்டர், பிட்டர், மோட்டார் மெக்கானிக், டீசல் என்ஜின் மெக்கானிக் டிரில்லர், எந்திர உதவியாளர் ஆகிய தொழிற் பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தொழிற் பிரிவுகளுக்கு மாவட்ட அளவில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்க விரும்புவோர் www.ski-l-lt-r-a-i-n-i-ng.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வருகிற 27-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கலந்தாய்வுக்கு விண்ணப்ப சலான் மற்றும் அசல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர் சேர்க்கையானது கலந்தாய்வு மூலம் ஒரே நாளில் நடத்தப்படும். விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பினால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதள முகவரில் தெரிந்து கொள்ளலாம்.

பயிற்சிகாலத்தின்போது பயிற்சி பெறுவோருக்கு மாதந்தோரும் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும். விலையில்லா பாடபுத்தகம்,விலையில்லா வரைபட கருவிகள், விலையில்லா மடிகணினி, சீருடை, சைக்கிள் பஸ்பாஸ், உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள ஆண்கள், பெண்கள் தர்மபுரி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய தர்மபுரி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை அணுகலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்