மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் அரிசி வழங்க வேண்டும் அமைச்சர் கந்தசாமி உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கந்தசாமி உத்தரவிட்டார்.;

Update: 2018-06-01 22:45 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பட்டுத்துறை, குடிமை பொருள் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை குறித்த ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் அஸ்வனி குமார், நிதித்துறை செயலாளர் கந்தவேலு, அரசு செயலாளர் சுந்தரவடிவேலு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சிவக்குமார், சமூக நலத்துறை இயக்குனர் சாரங்கபாணி, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தையா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டம் நடைபெறுவதையொட்டி சமூக நலம், ஆதிதிராவிடர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, குடிமை பொருள் வழங்கல், கூட்டுறவு ஆகிய துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அதற்கு செலவு செய்யப்பட்டு நிதிகள், நிலுவையில் உள்ள திட்டங்கள் ஆகியவை குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கந்தசாமி கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து, இந்த நிதியாண்டில் திட்டங்களை செயல்படுத்த தேவைப்படும் நிதி ஆதாரம் குறித்தும், வளர்ச்சி திட்டங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிலை, துறை வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் கல்வி மற்றும் தகுதி அடிப்படையில் நிரப்புவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு காலம் தாழ்த்தாமல் மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் கந்தசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்