அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
திருப்பூர் மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர்,
அனுமதியற்ற மனைப்பிரிவுகள் வரன்முறைப்படுத்திக்கொள்ள வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதி வரை காலஅவகாசம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் மனைகளை வரன்முறைப்படுத்தி பயனடைய வசதியாக தாலுகா வாரியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகர் ஊரமைப்புத்துறை சேலம் மற்றும் கோவை மண்டல அலுவலர்கள் இணைந்து மனைகளை வரன்முறைப்படுத்திக்கொள்ள சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு மண்டலம் வாரியாக மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்ட குழுமம் இணைந்து சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் கடந்த 20-10-2016-க்கு முன்பு மனை வாங்கிய அனைவரும் இதுவரையில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கப்படாமல் இருந்தால் www.tnl-ay-out-r-eg.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தின் பதிவு ரசீது நகல், அனுமதியற்ற மனைப்பிரிவு முழு வரைபடம், கிரய பத்திரம், பட்டா மற்றும் கிரயம் பெற்ற தேதியில் இருந்து இணையவழி விண்ணப்ப தேதி வரையில் வில்லங்கச்சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் சிறப்பு முகாம் அறிவிக்கப்படும் நாட்களில் உரிய கட்டணங்கள் செலுத்தி மனைகளை வரன்முறைப்படுத்திக்கொள்ளலாம்.
இந்த வாய்ப்பை தவறவிட்டால் இனி வரும் காலங்களில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் மனை அனுமதி பெறுவதோ, கட்டிட அனுமதி பெறுவதோ, தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் பெறுவதோ இயலாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.