தொடக்கக்கல்வி துறையை முற்றிலும் அகற்றும் முடிவை கண்டித்து முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு 7-ந்தேதி ஆர்ப்பாட்டம்
தொடக்கக்கல்வித் துறையை முற்றிலும் அகற்றும் முடிவை கண்டித்து 7-ந் தேதி முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவது என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சிவகங்கை,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையிலும் மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலையிலும் சிவகங்கையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், ஆரோக்கியராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவி, ஜெயக்குமார், மாவட்ட துணை தலைவர்கள் மாலா, மலசேவியர் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், தூத்துக்குடி போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 11-ந்தேதி முதல் சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்டத்தின் 3 இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்வது, திருப்பத்தூரில் செயல்பட்டு வரும் வட்டார கல்வி அலுவலகத்தை அங்குள்ள 11-வது வார்டு தொடக்கப்பள்ளிக்கு மாற்றுவதை கல்வித்துறை கைவிட வேண்டும்.
தமிழக கல்வித்துறையில் இருந்து தொடக்கக்கல்வி துறையை முற்றிலும் ஒழிக்கும் அரசாணைகளை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும், 2017-18-ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும், கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திடவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 7-ந்தேதி சிவகங்கையில் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.