குழந்தை பெற்ற பெண்ணும் மற்றொரு ஆண் குழந்தையும் இறந்ததால் பரபரப்பு
ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணும், மற்றொரு ஆண் குழந்தையும் அடுத்தடுத்து இறந்ததால், அவர்களின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவொற்றியூர்,
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மொக்கைத்தோட்டத்தைச் சேர்ந்தவர் முகமது யாசிப். துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இர்ஷாத்(வயது 21). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இர்ஷாத்துக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த 30-ந்தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
நேற்று முன்தினம் காலை முதல் இர்ஷாத்தின் உடல்நிலை திடீரென மோசமானது. அவருடன் இருந்த உறவினர்கள், இதுபற்றி டாக்டர்களிடம் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் இர்ஷாத்தின் நிலைமை குறித்து சரியான விளக்கம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த இர்ஷாத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இர்ஷாந்துக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவமனை அருகே அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் ராவேரி பிரியா தலைமையிலான ராயபுரம் போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போகச்செய்தனர்.
நள்ளிரவு 1 மணியளவில் இர்ஷாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இது குறித்து மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம் கூறும்போது, “இர்ஷாத்துக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரிக்கப்படும். தவறு நடந்து இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்தநிலையில் அதே மருத்துவமனையில் எண்ணூர் தாழங்குப்பத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மனைவி சோனியா(22) என்ற நிறைமாத கர்ப்பிணியும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், தாய்-சேய் இருவரும் நலமாக உள்ளனர் என்று கூறியதாக தெரிகிறது.
நேற்று காலை 8 மணிவரை சுகப்பிரசவம் ஆகும் என்று டாக்டர்கள் கூறினர். ஆனால் காலை 10 மணியளவில் சோனியாவுக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்து உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தையின் தலையில் தொப்புள் கொடி சுற்றிக்கொண்டதால் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சோனியாவின் உறவினர்கள், மருத்துவ அதிகாரி அனிதா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாயும், சேயும் நலமாக உள்ளனர். குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்று கூறிய டாக்டர்கள், தற்போது குழந்தை இறந்து பிறந்து உள்ளதாக கூறுகின்றனர். டாக்டர்கள் சரியாக கவனிக்காததால்தான் குழந்தை இறந்து விட்டது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ராயபுரம் போலீசார், உறவினர்களிடம் பேசி சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். இது தொடர்பாக அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கூறியதாவது.
இந்த மருத்துவமனைக்கு தினமும் 100-க்கும் மேற்பட்டோர் பிரசவத்துக்காக வருகிறார்கள். வடசென்னை மட்டுமின்றி ஆந்திராவில் இருந்தும் இங்கு வருகின்றனர். ஆனால் இந்த மருத்துவமனையில் போதிய ஊழியர்கள் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவங்களும் நடைபெற்று உள்ளது.
இங்குள்ள ஊழியர்கள் ஆண் குழந்தை பிறந்தால் ரூ.500, பெண் குழந்தை என்றால் ரூ.300 என கேட்டு வாங்குகின்றனர். நோயாளிகள் தங்கி உள்ள அறைகளின் கழிவறைகளை சுத்தம் செய்வது உள்பட எல்லாவற்றுக்கும் ஒரு விலை நிர்ணயித்து நோயாளிகளின் உறவினர்களிடம் வலுக்கட்டாயமாக வாங்குகின்றனர்.
மருத்துவமனையில் இருந்து வெளியே செல்ல முடியாத நோயாளிகளிடம், அவர்களுக்கு தேவையான பொருட்களை மருத்துவமனை ஊழியர்களே வாங்கி வந்து இரு மடங்கு விலை வைத்து விற்று விடுகிறார்கள். வேறு வழியின்றி அவர்களும் அந்த பணத்தை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. ஜெனரேட்டர் வசதி இருந்தும் மின்தடை ஏற்பட்டதால் சில அறுவை சிகிச்சைகளை செய்யாமல் தள்ளி வைத்து விடுகிறார்கள். குடிநீர் வசதி உள்பட நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.