சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் சாவு உறவினர்கள் போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் வன்னிக்குடியை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மனைவி ராதா நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் வன்னிக்குடியை சேர்ந்தவர் பாண்டி (வயது28). இவருடைய மனைவி ராதா(25). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் ராதா தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்து விட்டாராம். இதற்கு டாக்டர்களின் கவனக்குறைவே காரணம் என்று கூறி ராதாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல்அறிந்து ராமநாதபுரம் நகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவசாமி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.