தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை

காரணைப்புதுச்சேரியில் தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-06-01 22:15 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைப்புதுச்சேரி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மகள் அபிநயா(வயது 13), ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் விடுமுறை நாட்களில் வீட்டில் எந்த வேலையும் சரியான முறையில் செய்யவில்லை என்று அவரது தாய் கண்டித்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த அபிநயா நேற்று முன்தினம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்