மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
சுந்தரக்கோட்டை,
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை கால தாமதமின்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும். தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆள்குறைப்பு, சம்பள குறைப்பு, தபால் நிலையங்களை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
தபால் துறையை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 10-வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது. இதையொட்டி மன்னார்குடி தலைமை தபால் நிலையம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க கிளை தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், சாமிநாதன், மதியழகன், உதயகுமார், இளங்கோவன், தாயுமானவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தபால் ஊழியர்கள் சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.
சங்க செயலாளர்கள் கிருஷ்ணன், சந்திரசேகரன், துர்க்கேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் கோஷங்களை எழுப்பினர்.