தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகள் இடிப்பு
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லின் எந்திரம் மூலம் இடித்து தள்ளினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை-புதுக்கோட்டை சாலை, மாதாக்கோட்டை பிரிவு சாலையில் இருந்து மேலவஸ்தாசாவடி வரை சாலையின் இரண்டு பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் தொடங்கியது. நேற்று 3-வது நாளாக ஆலமரம் பஸ் நிறுத்தம், ஆர்.ஆர்.நகர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அதன்படி சாலையோர கடைகள், குடிசைகள் போன்றவை அப்புறப்படுத்தப்பட்டன. அந்த பகுதியில் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த கடைகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தனர். இதையடுத்து கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் அருணகிரி ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடைகள் இடிக்கும் பணி நடந்தது.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணசெல்வம், உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து, உதவி பொறியாளர் இளங்கோ மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லின் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்களை இடித்து தள்ளினர். மேலும் அந்த பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த காம்பவுண்டு சுவர், கார் ஷோரூமின் கட்டிடம் போன்றவையும் இடிக்கப்பட்டன.
தொடர்ந்து மேலவஸ்தாசாவடி வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஆர்.ஆர்.நகர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்கு விபத்து ஏற்படாத வகையில் சிறிய ரவுண்டான அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.