புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதிய தமிழகம் கட்சியினர் நேற்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;
திருச்சி,
புதிய தமிழகம் கட்சியினர் நேற்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும், கொலை யானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.