வேலம்மாள் மருத்துவ கல்லூரி சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினம்

வேலம்மாள் மருத்துவ கல்லூரி சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Update: 2018-05-31 22:15 GMT
மதுரை

மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களிடம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். மருத்துவமனை டீன் ராஜாமுத்தையா முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மதுரை மாநகராட்சி கமிஷனர் அனீஸ்சேகர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகத்துடன் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். பின்னர் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.பொது மக்களுக்கு மருத்துவகல்லூரி மாணவ-மாணவிகள் புகையிலையின் ஆபத்துக்கள் குறித்து விளக்கினார்கள், அங்கு கூடியிருந்தவர்கள் ஆர்வத்துடன் விழிப்புணர்வு பலகையில் கையெழுத்திட்டனர்.

மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், முதன்மை செயல் அதிகாரி சுப்பிரமணி, முதுநிலை பொதுமேலாளர் கணேஷ்வீரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர்கள் ராஜ்குமார், சமீர்பெல்லி நன்றி கூறினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவ மனை அலுவலர்கள், ஊழியர்கள் செய்து இருந்தார்கள்.

இதேபோல மதுரை ரெயில் நிலைய கிழக்கு நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியை மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனு இட்டியேரா, கூடுதல் கோட்ட மேலாளர் முரளிகிருஷ்ணா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மேலும் செய்திகள்