கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள காட்டு நாச்சியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
காளையார்கோவில்,
காளையார்கோவில் ஒன்றியம் கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள காட்டு நாச்சியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கீழக்கோட்டை-மதகுபட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 33 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை கீழக்கோட்டை கவுசிக்தேவன் வண்டியும், 2-வது பரிசை பண்ணைப்புரம் ஜீவகன் வண்டியும், 3-வது பரிசை வெள்ளரிப்பட்டி வசந்த் வண்டியும் பெற்றன.
பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 21 வண்டிகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசை கல்லல் அழகுசுகன்யா வண்டியும், 2-வது பரிசை ஜெய்ஹிந்த் புரம் அக்னிமுருகன் வண்டியும், 3-வது பரிசை அய்யர்பட்டி முனுசாமி வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.