வங்கி ஊழியர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்: ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் மக்கள் தவிப்பு
வங்கி ஊழியர்கள் 2–வது நாள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள். மேலும் ரூ.400 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
நாடு முழுவதும் வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பள உயர்வு கடந்த 2017–ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. எனவே இதுதொடர்பாக வங்கி ஊழியர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து 2 சதவீத ஊதிய உயர்வு வழங்க வங்கிகள் சம்மேளனம் முன் வந்தது. அதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வழங்கியதை போன்று ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக 5 வங்கி ஊழியர் சங்கங்களும், 4 வங்கி அதிகாரிகள் சங்கங்களும் இணைந்த வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டம் குமரி மாவட்டத்திலும் 2 நாட்களாக நடந்தது. இதனால் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் யாரும் வேலைக்கு செல்லாததால் குறிப்பிட்ட சில வங்கிகள் தவிர பெரும்பாலான வங்கிகள் நேற்றும் மூடப்பட்டு இருந்தன. திறக்கப்பட்டிருந்த வங்கிகளிலும் ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடி கிடந்தது.
நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் வங்கிகள் செயல்படவில்லை. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. காசோலைகள் மூலம் நடைபெற வேண்டிய பண பரிமாற்றமும் தடை பட்டது. ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனைகளும் முடங்கியது.
சேமிப்பு கணக்குகள், நடப்பு கணக்குகள், நிறுவன கணக்குகளில் இருந்து பணம் எடுக்கவோ, பணம் போடவோ முடியாத நிலையும் ஏற்பட்டது.
குமரி மாவட்டத்தில் 1,200 ஏ.டி.எம்.கள் செயல்படுகின்றன. பல வங்கிகளின் ஏ.டி.எம்.களில் ஏஜென்சி நிறுவனங்கள் மூலம் பணம் வைக்கும் பணி நடைபெறுகிறது. சில ஏ.டி.எம்.களில் நேரடியாக அந்தந்த வங்கிகள் சார்பில் பணம் வைக்கப்படுகிறது. 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.கள் நேற்று முன்தினம் மதியத்தில் இருந்து பணம் இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.
பணம் இருந்த ஒரு சில ஏ.டி.எம். மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பொதுமக்கள் ஏ.டி.எம். மையங்கள் ஒவ்வொன்றாக ஏறி இறங்கியும் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்த நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை முன் 2–வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார். வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் சங்க உதவி பொதுச்செயலாளர் காஜாமைதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் குமரி மாவட்ட வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் கூறியதாவது:–
ஊதிய உயர்வு கேட்டு நாடு முழுவதும் 2–வது நாளாக இன்றும் (அதாவது நேற்று) வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தனியார் வங்கி கிளைகள் என மொத்தம் 320 கிளைகள் உள்ளன. அவற்றில் 1,400 வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவருமே இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். குமரி மாவட்டத்தில் அனைத்து வங்கிகளையும் சேர்த்து நாள் ஒன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடைபெறுவது வழக்கம். ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 நாட்களில் சுமார் ரூ.400 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குமரி மாவட்டத்தில் 1,200 ஏ.டி.எம். மையங்கள் செயல்படுகின்றன. கடந்த 2 நாட்கள் போராட்டம் காரணமாக 90 சதவீதம் அதாவது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் பணம் இல்லாமல் முடங்கிவிட்டன.
வங்கிகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் திருப்பி செலுத்தப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக வங்கிகளின் லாபத்தை கொண்டு வராக்கடனை ஈடுசெய்கிறார்கள். வங்கிகளில் கடன் வாங்கி பணம் செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.