கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்த 800 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்த 800 லிட்டர் மண்எண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நித்திரவிளை,
குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் விற்கப்படும் மண்எண்ணெய் ஆகியவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க மாவட்டத்தின் எல்லையில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள்.
மேலும், வருவாய்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று வாகன சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள். ஆனாலும், கடத்தல்காரர்கள் சொகுசு கார், அரசு பஸ் என நூதன முறையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், கடத்தல் பொருட்களை சாலையோரம் பதுக்கி வைத்துவிட்டு, ஆட்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் கேரளாவுக்கு கடத்தும் சம்பவங்களும் நடக்கிறது.
இந்த நிலையில், மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று அதிகாலையில் நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாலையோரம் பிளாஸ்டிக் கேன்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டனர். சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அதை சோதனையிட்ட போது, 800 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து சின்னத்துறை அரசு குடோனில் ஒப்படைத்தனர். மேலும், இதை பதுக்கி வைத்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.