தென்காசி, வள்ளியூரில் தபால் ஊழியர்கள் நூதன போராட்டம்

தென்காசி, வள்ளியூரில் தபால் ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-05-31 21:15 GMT
தென்காசி, 

தென்காசி, வள்ளியூரில் தபால் ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

அனைத்து இந்திய கிராமிய தபால் ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும். கிராமப்புற பெண் தபால் ஊழியர்களுக்கு 26 வார கால மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22–ந்தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

நேற்று 10–வது நாளாக கிராமிய தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் நீடித்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்காசி தலைமை தபால் நிலையம் முன்பு கிராமிய தபால் ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராமிய தபால் ஊழியர்கள் சங்க கோட்ட தலைவர் நெல்லையப்பன் தலைமை தாங்கினார். பொருளாளர் கோமதிநாயகம், செயலாளர் பூ ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வள்ளியூர்

இதேபோன்று வள்ளியூர் தலைமை தபால் நிலையம் முன்பு கிராமிய தபால் ஊழியர்கள், கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கிராமிய தபால் ஊழியர் சங்க கோட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ஞானபால்சிங் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் முருகேசன், முத்தையா, முரளி பிரகாஷ், காளிமுத்து, மூக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்