தூத்துக்குடியில் துணிகரம் மூதாட்டியிடம் நகை–செல்போன் பறிப்பு 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடியில் மூதாட்டியை தாக்கி நகை, செல்போனை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2018-05-31 20:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மூதாட்டியை தாக்கி நகை, செல்போனை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

மூதாட்டி

தூத்துக்குடி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மனைவி மல்லிகா (வயது 76). இவர்களுடைய மகன் அசோகன் திருமணம் ஆகி அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மல்லிகா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இதனை நோட்டமிட்ட 2 மர்ம நபர்கள், நேற்று முன்தினம் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியே வந்த மல்லிகாவை தாக்கினர். பின்னர் அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் இழுத்து சென்று, ஒருபக்க காதில் அணிந்திருந்த 4 கிராம் தங்க கம்மலை பறித்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

மற்றொரு பக்க காதில் கிடந்த கம்மலை அந்த நபர்கள் நீண்டநேரம் போராடியும் பறிக்க முடியவில்லை. இதனால் ஏற்கனவே பறித்த கம்மலுடன், வீட்டில் இருந்த அவருடைய செல்போனையும் எடுத்து கொண்டு அந்த நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து மல்லிகா தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்