தூய்மையற்ற ரெயில்நிலைய பட்டியலில் முதல் 10 இடத்தில் கல்யாண், தானே, லோக்மான்யா திலக் டெர்மினஸ்
தூய்மையற்ற ரெயில்நிலையங்களின் பட்டியலில் முதல் 10 இடத்தில் கல்யாண், தானே,லோக்மான்யா திலக் டெர்மினஸ் ரெயில் நிலையங்கள் வந்துள்ளன.
மும்பை,
தூய்மையற்ற ரெயில்நிலையங்களின் பட்டியலில் முதல் 10 இடத்தில் கல்யாண், தானே,லோக்மான்யா திலக் டெர்மினஸ் ரெயில் நிலையங்கள் வந்துள்ளன.
தூய்மையற்ற ரெயில்நிலையங்கள்இந்திய ரெயில்வே நாடு முழுவதும் உள்ள தூய்மையற்ற ரெயில்நிலையங்கள் குறித்து கடந்த 11-ந்தேதி முதல் 17-ந் தேதி வரை ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு நாடு முழுவதும் உள்ள ரெயில்நிலையங்களில் நடத்தப்பட்டது. ஆய்வில் ரெயில்நிலையங்களின் தூய்மை மற்றும் சுகாதாரத் தன்மை குறித்து பயணிகளிடம் கேட்கப்பட்டது.
பயணிகள் அளித்த மதிப்பெண்ணின் அடிப்படையில் நாட்டில் சுகாதாரமின்றி இருக்கும் ரெயில்நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மும்பை ரெயில்நிலையங்கள்இந்த பட்டியலில் மும்பையில் உள்ள கல்யாண், லோக்மான்ய திலக் டெர்மினஸ், தானே ஆகிய 3 ரெயில்நிலையங்கள் இடம்பிடித்து உள்ளன. தூய்மையற்ற ரெயில்நிலைய பட்டியலில் முதல் 10 இடம் பிடித்த ரெயில்நிலையங்கள் பின்வருமாறு:-
கான்பூர் சென்டிரல், பாட்னா சந்திப்பு, கல்யாண், வாரணாசி, லோக்மான்யா திலக் டெர்மினஸ், அலகாபாத், பழைய டெல்லி, தானே, லக்னோ, சண்டிகர்.
இது குறித்து மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது:-
பயணிகள் வழங்கும் ஆலோசனைகள் அடிப்படையில் ரெயில்நிலையங்களை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் ரெயில்நிலையத்தை சுத்தமாக வைக்க முடியாமல் போய்விடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.