தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட முயற்சி
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தை கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட முயன்றனர். மேலும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றுமுன்தினம் பொதுமக்கள் போராட்டம் நடத்திய போது அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சேலத்திலும் போராட்டம் நடைபெற்றது. நேற்று 2-வது நாளாக சேலத்தில் போராட்டம் தொடர்ந்தது. அதன்படி சேலம் அரசு கல்லூரி மாணவர்கள் பலர் நேற்று கருப்பு சட்டை அணிந்து கொண்டு சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் மாணவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும் படி கூறினார். இதைத்தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்ட மக்கள் தேசம் கட்சியினர் நேற்று காலை சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாநில இளைஞர் அணி செயலாளர் ஆசைதம்பி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவிப்பது, துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சுலைமான், துணை செயலாளர் இளமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து சேலம் எருமாபாளையம், ஜான்சன்பேட்டை, மெய்யனூர், பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று புரட்சிகர இளைஞர் முன்னணியினர் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு துணை கமிஷனர்கள் தங்கதுரை, சுப்புலட்சுமி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.