தலைவாசல் அருகே கார் கவிழ்ந்து தொழில் அதிபர் பலி
தலைவாசல் அருகே கார் கவிழ்ந்து தொழில் அதிபர் பலியானார்.
தலைவாசல்,
கோவை மாவட்டம் சூலூர் தாலுகா நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தன் (வயது 45). தொழில் அதிபர். இவரது மனைவி ஸ்ரீலதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நித்தியானந்தன் முனைவர் பட்டம் பெற விரும்பினார். இதற்காக அவர் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தேர்வு எழுதுவதற்காக நித்தியானந்தன் சென்றார். அங்கு தேர்வு எழுதிவிட்டு நேற்று காரில் கோவைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்தார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஏரிக்கரை பகுதியில் வந்த போது திடீரென்று கார் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
சாவு
இந்த விபத்தில் காருக்குள் சிக்கிய அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.