நாமக்கல் மாவட்டம் முழுவதும் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் 2-வது நாளாக நீடிப்பு
கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அஞ்சலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
நாமக்கல்,
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 7-வது ஊதிய குழுவின் பலன்களை பெறும் வகையில் கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களின் போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.
நாமக்கல் மாவட்டத்தில் அஞ்சல் ஊழியர் சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மொத்தம் உள்ள 342 தபால் நிலையங்களில் 314 தபால் நிலையங்கள் நேற்று மூடப்பட்டன. இவற்றில் பணிபுரியும் 819 பணியாளர்களில் 743 பேர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் நாமக்கல் தலைமை தபால் நிலையம் மற்றும் துணை தபால் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தபால் பட்டுவாடா, அஞ்சலக பண பரிவர்த்தனை என தபால் நிலையங்களில் வழக்கமாக நடைபெறும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. தபால்கள் அதிக அளவில் தேங்கி கிடப்பதையும் பார்க்க முடிந்தது.
இதையொட்டி நாமக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் முன்பு கோட்ட செயலாளர் செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு கிளைத் தலைவர் பழனி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பள்ளிக்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டிய நிலையில் உள்ள மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்பங்களை அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். நேற்று திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவி ஒருவர் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் அனுப்ப தலைமை தபால் நிலையத்திற்கு வந்தார். அங்கு விரைவு தபால் மூலம் விண்ணப்பம் அனுப்ப முயன்றார். அங்கிருந்த ஊழியர் தபாலை பெற்றுக் கொள்கிறோம். ஆனால் எப்போது பட்டுவாடா ஆகும் என உறுதி சொல்ல முடியாது என கூறியுள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் என்பதால் அந்த மாணவி கோவைக்கு நேரில் சென்று விண்ணப்பம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் தேவையற்ற பொருள் செலவு, கால விரயம் மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக மாணவியின் உறவினர்கள் தெரிவித்தனர். இதேபோல மற்ற மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் மத்திய அரசு விரைந்து தலையிட்டு இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.