தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு: இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சின்னசாமி, மாதேஸ்வரன், கந்தசாமி, காதர், மாது, விஸ்வநாதன், கமலாமூர்த்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள். சுற்றுச்சூழலை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். பொதுமக்களின் போராட்டத்தை முடக்கும் வகையில் மனிதாபிமானமற்ற முறையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டக்குழுவினர் கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.