மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.69 லட்சம் நலத்திட்ட உதவிகள் உதவி கலெக்டர் வழங்கினார்
மிட்டாதின்னஅள்ளியில் நடந்த மக்கள்தொடர்பு திட்ட முகாமில் ரூ.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு உதவி கலெக்டர் ராமமூர்த்தி வழங்கினார்.
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் மிட்டாதின்னஅள்ளி கிராமத்தில் மக்கள்தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை உதவி கலெக்டர் ராமமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தாசில்தார் பழனியம்மாள் வரவேற்றார். தனித்துணை கலெக்டர் முத்தையன் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் வேளாண் இணை இயக்குனர் சுசீலா, கால்நடைதுறை இணை இயக்குனர் ராஜமனோகரன், வேளாண்மை துணை இயக்குனர் அண்ணாமலை, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, தாட்கோ பொதுமேலாளர் ஏழுமலை கலால் உதவி ஆணையர் மல்லிகா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சரவணன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த அரசு திட்டங்கள், நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.
ரூ.69 லட்சம்
சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பெற்று விசாரணை நடத்தி நடத்தி தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த முகாமில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 67 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உதவி கலெக்டர் ராமமூர்த்தி வழங்கினார். இதில் அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.