போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து தொழிற்சங்கத்தினர்–வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து தஞ்சையில் தொழிற்சங்கத்தினர்–வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யக்கோரி பொதுமக்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை கோர்ட்டு முன்பு வக்கீல்கள் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு புதுச்சேரி–தமிழக வக்கீல்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு மாநில செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தஞ்சை வக்கீல்கள் சங்க தலைவர் சதாசிவம், செயலாளர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். சட்ட விதிகளை மீறி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக மக்களை சந்திக்க மறுத்து வரும் கலெக்டர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் வக்கீல்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநிலக்குழு உறுப்பினர் திருஞானம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம் தொடங்கி வைத்தார். இதில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், விஜயலட்சுமி, ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு காரணமான தமிழகஅரசை கண்டித்தும், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வலியுறுத்தியும் கும்பகோணம்–நாகை மண்டல அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொ.மு.ச. பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் துரை.மதிவாணன், சி.ஐ.டி.யூ. பொதுச் செயலாளர் மணிமாறன், த.மா.கா. தொழிற்சங்க நிர்வாகி கலியன், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி வைத்தியநாதன் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இவர்கள் அனைவரும் சட்டையில் கருப்பு சின்னம் அணிந்திருந்தனர்.