மின்வாரிய ஊழியர் வீட்டில் 14 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
ராசிபுரத்தில் மின்வாரிய ஊழியர் வீட்டில் 14 பவுன் நகை திருடப்பட்டது. இது தொடர்பாக போலீசார் மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் ரோட்டரிநகரைச் சேர்ந்தவர் ரவி (வயது 54). இவர் நாமக்கல் அருகே வளையப்பட்டி மின்வாரிய பவர்ஹவுசில் போர்மேனாக வேலை செய்துவருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர் நகர கூட்டுறவு வங்கியில் உதவியாளராக வேலை செய்துவருகிறார். இவர்களது மகன் அமர்நாத். பி.இ.பட்டதாரி. இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் உள்ள குளிர்சாதன படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் மர்மஆசாமிகள் சிலர் வீட்டின் மெயின்கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அவர்கள் வீட்டின் இன்னொரு படுக்கைஅறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.1.40 லட்சம் ஆகும்.
நேற்று அதிகாலை 5 மணியளவில் தூங்கிஎழுந்த ரவி, வீட்டுக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார். படுக்கைஅறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ திறந்திருப்பதையும், துணிமணிகள் சிதறி கிடப்பதையும் பார்த்த அவர் இதுபற்றி மனைவி சித்ராவிடம் தெரிவித்தார். அப்போது கணவன்-மனைவி இருவரும் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மர்மநபர்கள் வீட்டின் பின்புற கதவை திறந்து வெளிப்புறத்தில் நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள், பர்சுகளை போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அதேபோல் ரவியின் மகன் அமர்நாத்தின் பர்சை வீட்டின் முன்புறத்தில் வைக்கப்பட்டிருந்த மண்தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அந்த பர்சில் வைக்கப்பட்டிருந்த பான்கார்டு போன்றவற்றை அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதுபற்றி ரவி ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இந்த சம்பவத்தில் துப்புதுலக்க நாமக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர் சங்கீதா நேரில் வந்திருந்து தடயங்களை சேகரித்தார். நாமக்கல்லில் இருந்து துப்பறியும் போலீஸ் நாய் பொய்கை வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இச்சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.